Comments on: ஒரு பெண்ணை காப்பாற்ற நேராக களமிறங்கிய அப்துல் கலாம் | Kaliyamurthy Speech | கலியமூர்த்தி பேச்சு https://www.ariyalurdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0/ Ariyalur District Website - அரியலூர் மாவட்ட இணையதளம் Mon, 10 Aug 2026 11:35:51 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.1.11 By: @kanagarajchellaiah6580 https://www.ariyalurdistrict.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0/#comment-81570 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.ariyalurdistrict.com/?p=21416#comment-81570 அய்யா, அனைத்து IPS படித்து முடித்தவர்களும் உங்களைப் போல் தமிழ்பற்றாளராகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் இருப்பதில்லை. உங்கள் சொற்பொழிவை வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் நான் கேட்க தவறுவதில்லை. தமிழ்நாடும் தமிழ் சமுதாயமும் உங்களால் பெருமிதம் கொள்கிறது. சரஸ்வதி என்ற இளம் பெண்ணை கல்வி எப்படி காத்தது எப்படி உயர்த்தியது என்பதையும் மைக்கேல் பெல்ஸின் விடாமுயற்சி 25 தங்க பதக்கங்களை வெல்ல வைத்த நிகழ்வையும் எத்துணை நயம்பட எடுத்து உரைத்தீர்கள். Renders are leaders என்ற வரிகள் இன்றைய தலைமுறைக்கு ஒரு “டானிக்” என்றால் மிகையாகாது. பெற்றோர்களின் கடைமையையும் ஆசிரியர்களின் பொறுப்பையும் என்னமாய் விளக்கினீர்கள். தாயின் தியாகத்தை போற்றும் வகையில் தாமஸ் ஆல்வா எடிசனையும் சிங்கப்பூர் வாலிப ணையும் உதாரணப் படுத்தினீர்கள் . மாவீரன் அலெக்சாண்டரின் வரக்குமூலத்தால் தாயின் சிறப்பையும் ஆசிரியரின் பெருமையையும் கண் முன் கொண்டு வந்தீர்கள். இன்றைய இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் உங்களது இந்த பேச்சை ஒரு முறை கேட்டால் போதும் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் வழிகளில் இருந்து மீண்டு வருவார்கள் என்பது நிச்சயம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். இறைவன் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் உங்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன்.

]]>